01. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பல்துறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள்
தெரிந்தவை ஒரு பார்வை என்ற தொகுதி, ஆழ்ந்த வாசிப்பின் தேடலின் பிரதிபலனாக இலக்கிய உலகுக்கு கிடைத்ததொரு காத்திரமான - கனதியான நூலாகும். வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ரிஸ்னாவின் இந்த நூல், நூலாசிரியரின் ஏழாவது நூல் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இதற்கு முன்னர் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் இன்னும் உன் குரல் கேட்கிறது (2012) என்ற கவிதை தொகுதியையும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வைகறை (2012) என்ற சிறுகதைத் தொகுதியையும், ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் காக்காக் குளிப்பு (2012), வீட்டிற்குள் வெளிச்சம் (2012), இதோ பஞ்சுக் காய்கள் (2012), மரத்தில் முள்ளங்கி (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இலக்கியத் துறையில் அதிக முனைப்புடன் ஈடுபாடு காட்டி கடந்த ஒரு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஈழத்தில் வெளிவரும் பல முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும், தொலைக்காட்சி, வானொலிகளிலும்; மட்டுல்லாமல் வலைப்பூக்கள் பலவற்றிலும் கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதிவருகிறார். அத்துடன் பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் என்பது இவரது ஆளுமையின் அடையாளமாகும்.
அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கலாபூஷணம் மாவனல்லை மன்ஸுர் அவர்கள் எழுதியுள்ளார். கொடகே வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 248 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில், ரிஸ்னா பத்திரிகையில் எழுதி வெளிவந்த 40 நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
08 கவிதை நூல்களையும், 11 சிறுகதை நூல்களையும், 06 நாவல்களையும், 09 சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களையும், 06 ஏனைய நூல்களுமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களினால் எழுதி வெளியிடப் பட்டதுமான, முக்கியமான மூத்த இலக்கியவாதிகளின் நூல்கள் உட்பட மொத்தம் 40 நூல்களை இந்த நூலில் நூலாசிரியர் திறனாய்வு செய்துள்ளார். இதில் படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, கருத்துக்கள், படைப்பாளிகள் பற்றிய விபரங்கள், நூல் பற்றிய இரசனைப் பாங்கான குறிப்புக்கள் மிகவும் தெளிவான முறையில் நூலாசிரியரினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவே இந்த நூலைப் பார்க்க முடியும். ஒவ்வொரு திறனாய்வாளரும், இலக்கியவாதியும் வாங்கி வாசிப்பது மாத்திரமல்லாமல் தன்னிடம் பாதுகாத்து வைக்கவும் தகுந்த ஒரு அருமையான பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் நூல்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்நூல் அமைந்துள்ளது.
தான் வாசித்த புத்தகங்களில் காணப்படும் விடயங்களை ஆழமாகவும், அர்த்தபூர்வமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு வாசகரைக் கவரும். தனக்கென்ற ஒரு பாணியில் இலக்கியம் படைத்து, தெளிவான மொழிநடையில் வாசகர்களைக் கவர்வது இலக்கிய முயற்சியில் வெற்றிபெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ரிஸ்னாவின் பயணம் அப்படியே தொடர்ந்து செல்கிறது. அலட்டல்களில்லாத எளிமையான மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கின்றமை, வாசகர்களுக்கு புத்தகத்தை சிரமமில்லாமல் வாசிக்க உதவியாய் அமைகிறது.
`இலக்கியத் திறனாய்வின் மற்றொரு பரிணாமம்' என்ற தலைப்பில் அணிந்துரை வழங்கியுள்ளார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ``இலக்கியத் திறனாய்வு என்ற பெரியதொரு படுதாவினுள் பற்பல கூறுகள் உள்ளன. இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியப் பிரகிருதிகள், தொடர்பான பிரத்தியேகப் பார்வைகள், இலக்கியக் கால கட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள், பொதுவான திறனாய்வுகள், மதிப்புரைகள், இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், காரசாரமான விமர்சனங்கள், அங்கதக் கண்டனங்கள், இரசனைப் பாங்கான திறனாய்வுகள், பொழிப்புரைகள், விபரிப்புகள், விவரணங்கள் - இவை போன்றவை திறனாய்வு (Literary Studies அல்லது Literary Critisms) என்ற பெரும் துறைக்குள் அடங்கும். பழைய இலக்கியங்களுக்கான உரையாசிரியர்களின் விளக்கக் கட்டுரைகளும் ஒரு விதத்தில் திறனாய்வுகளே.
கொழும்பைப் பொறுத்தமட்டில், மா. பாலசிங்கம், தம்பு சிவா என்ற சிவசுப்பிரமணியம், வெலிகம ரிம்ஸா முஹம்மத், வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன், செ. முருகானந்தம், கே.எஸ். சிவகுமாரன் மற்றும் பல்வேறு இடங்களில் உமா வரதராஜன், ரஞ்ச குமார், அ. யேசுராசா, சே. யோகநாதன் போன்றவர்கள் திறனாய்வில் மற்றொரு பாங்கில் திறனாய்வு சார்ந்த இரசனைக் கட்டுரைகளை எழுதி வருபவர்கள். இவர்களைவிட மார்க்;சிய, மற்றும் தலித் சார்பான விமர்சகர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் Academics எனப்படும் பல்கலைக்கழக மட்ட விமர்சகர்களாவார். இவர்களுக்கு முன்னோடியாக இலக்கிய வரலாறுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதிய க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் விளக்கினார்கள். இந்தப் பின்னணியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெலிகம ரிம்ஸா முஹம்மதும் பின்பற்றி வரும் இரசனைப்பாங்கான திறனாய்வு முறை திறனாய்வின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது'' என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இவ்வகையான விமர்சனங்களை ஏன் எழுதியுள்ளார் என்ற கேள்விக்கு நூலாசிரியரே தனதுரையில் பின்வருமாறு காரணம் கூறுகின்றார். ''சமகாலத்தில் எழுதப்படுகின்ற ஈழத்து இலக்கியவாதிகளின் நூல்களை வாசித்ததன் நிமித்தம் அவற்றைப் பற்றிய கருத்துக்களை, அந்த தொகுதிகளில் நான் சுவைத்த விடயங்களை ஏனையவர்களுக்கு சொல்ல நினைத்ததால் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வந்தேன்'' என்று குறிப்பிடுகின்றார்.
இடைவெளிவிடாது இலக்கியத் தொண்டாற்றிவரும் நூலாசிரியர், ஏழு படைப்புக்களைத் தந்து இளம் படைப்பாளிகள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் தனக்கென்று ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. பல்வேறுபட்ட தளங்களில் நின்று இலக்கியப் பணி புரியும் ரிஸ்னா, எதிர்வரும் காலங்களிலும் இலக்கிய உலகம் பெருமிதமடையும் வகையில் பல்துறைப் படைப்புக்களையும் வெளியிட வாழ்த்துகிறேன்!!!
நூலின் பெயர் - திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222, 0719200580
ஈமெயில் - riznahalal@gmail.com
வெளியீடு; - கொடகே பதிப்பகம்
விலை - 600 ரூபாய்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பல்துறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தொகுதி, ஆழ்ந்த வாசிப்பின் தேடலின் பிரதிபலனாக இலக்கிய உலகுக்கு கிடைத்ததொரு காத்திரமான - கனதியான நூலாகும். வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ரிஸ்னாவின் இந்த நூல், நூலாசிரியரின் ஏழாவது நூல் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இதற்கு முன்னர் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் இன்னும் உன் குரல் கேட்கிறது (2012) என்ற கவிதை தொகுதியையும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வைகறை (2012) என்ற சிறுகதைத் தொகுதியையும், ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் காக்காக் குளிப்பு (2012), வீட்டிற்குள் வெளிச்சம் (2012), இதோ பஞ்சுக் காய்கள் (2012), மரத்தில் முள்ளங்கி (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இலக்கியத் துறையில் அதிக முனைப்புடன் ஈடுபாடு காட்டி கடந்த ஒரு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஈழத்தில் வெளிவரும் பல முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும், தொலைக்காட்சி, வானொலிகளிலும்; மட்டுல்லாமல் வலைப்பூக்கள் பலவற்றிலும் கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதிவருகிறார். அத்துடன் பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் என்பது இவரது ஆளுமையின் அடையாளமாகும்.
அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கலாபூஷணம் மாவனல்லை மன்ஸுர் அவர்கள் எழுதியுள்ளார். கொடகே வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 248 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில், ரிஸ்னா பத்திரிகையில் எழுதி வெளிவந்த 40 நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
08 கவிதை நூல்களையும், 11 சிறுகதை நூல்களையும், 06 நாவல்களையும், 09 சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களையும், 06 ஏனைய நூல்களுமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களினால் எழுதி வெளியிடப் பட்டதுமான, முக்கியமான மூத்த இலக்கியவாதிகளின் நூல்கள் உட்பட மொத்தம் 40 நூல்களை இந்த நூலில் நூலாசிரியர் திறனாய்வு செய்துள்ளார். இதில் படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, கருத்துக்கள், படைப்பாளிகள் பற்றிய விபரங்கள், நூல் பற்றிய இரசனைப் பாங்கான குறிப்புக்கள் மிகவும் தெளிவான முறையில் நூலாசிரியரினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவே இந்த நூலைப் பார்க்க முடியும். ஒவ்வொரு திறனாய்வாளரும், இலக்கியவாதியும் வாங்கி வாசிப்பது மாத்திரமல்லாமல் தன்னிடம் பாதுகாத்து வைக்கவும் தகுந்த ஒரு அருமையான பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் நூல்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்நூல் அமைந்துள்ளது.
தான் வாசித்த புத்தகங்களில் காணப்படும் விடயங்களை ஆழமாகவும், அர்த்தபூர்வமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு வாசகரைக் கவரும். தனக்கென்ற ஒரு பாணியில் இலக்கியம் படைத்து, தெளிவான மொழிநடையில் வாசகர்களைக் கவர்வது இலக்கிய முயற்சியில் வெற்றிபெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ரிஸ்னாவின் பயணம் அப்படியே தொடர்ந்து செல்கிறது. அலட்டல்களில்லாத எளிமையான மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கின்றமை, வாசகர்களுக்கு புத்தகத்தை சிரமமில்லாமல் வாசிக்க உதவியாய் அமைகிறது.
`இலக்கியத் திறனாய்வின் மற்றொரு பரிணாமம்' என்ற தலைப்பில் அணிந்துரை வழங்கியுள்ளார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ``இலக்கியத் திறனாய்வு என்ற பெரியதொரு படுதாவினுள் பற்பல கூறுகள் உள்ளன. இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியப் பிரகிருதிகள், தொடர்பான பிரத்தியேகப் பார்வைகள், இலக்கியக் கால கட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள், பொதுவான திறனாய்வுகள், மதிப்புரைகள், இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், காரசாரமான விமர்சனங்கள், அங்கதக் கண்டனங்கள், இரசனைப் பாங்கான திறனாய்வுகள், பொழிப்புரைகள், விபரிப்புகள், விவரணங்கள் - இவை போன்றவை திறனாய்வு (Literary Studies அல்லது Literary Critisms) என்ற பெரும் துறைக்குள் அடங்கும். பழைய இலக்கியங்களுக்கான உரையாசிரியர்களின் விளக்கக் கட்டுரைகளும் ஒரு விதத்தில் திறனாய்வுகளே.
கொழும்பைப் பொறுத்தமட்டில், மா. பாலசிங்கம், தம்பு சிவா என்ற சிவசுப்பிரமணியம், வெலிகம ரிம்ஸா முஹம்மத், வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன், செ. முருகானந்தம், கே.எஸ். சிவகுமாரன் மற்றும் பல்வேறு இடங்களில் உமா வரதராஜன், ரஞ்ச குமார், அ. யேசுராசா, சே. யோகநாதன் போன்றவர்கள் திறனாய்வில் மற்றொரு பாங்கில் திறனாய்வு சார்ந்த இரசனைக் கட்டுரைகளை எழுதி வருபவர்கள். இவர்களைவிட மார்க்;சிய, மற்றும் தலித் சார்பான விமர்சகர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் Academics எனப்படும் பல்கலைக்கழக மட்ட விமர்சகர்களாவார். இவர்களுக்கு முன்னோடியாக இலக்கிய வரலாறுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதிய க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் விளக்கினார்கள். இந்தப் பின்னணியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெலிகம ரிம்ஸா முஹம்மதும் பின்பற்றி வரும் இரசனைப்பாங்கான திறனாய்வு முறை திறனாய்வின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது'' என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இவ்வகையான விமர்சனங்களை ஏன் எழுதியுள்ளார் என்ற கேள்விக்கு நூலாசிரியரே தனதுரையில் பின்வருமாறு காரணம் கூறுகின்றார். ''சமகாலத்தில் எழுதப்படுகின்ற ஈழத்து இலக்கியவாதிகளின் நூல்களை வாசித்ததன் நிமித்தம் அவற்றைப் பற்றிய கருத்துக்களை, அந்த தொகுதிகளில் நான் சுவைத்த விடயங்களை ஏனையவர்களுக்கு சொல்ல நினைத்ததால் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வந்தேன்'' என்று குறிப்பிடுகின்றார்.
இடைவெளிவிடாது இலக்கியத் தொண்டாற்றிவரும் நூலாசிரியர், ஏழு படைப்புக்களைத் தந்து இளம் படைப்பாளிகள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் தனக்கென்று ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. பல்வேறுபட்ட தளங்களில் நின்று இலக்கியப் பணி புரியும் ரிஸ்னா, எதிர்வரும் காலங்களிலும் இலக்கிய உலகம் பெருமிதமடையும் வகையில் பல்துறைப் படைப்புக்களையும் வெளியிட வாழ்த்துகிறேன்!!!
நூலின் பெயர் - திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222, 0719200580
ஈமெயில் - riznahalal@gmail.com
வெளியீடு; - கொடகே பதிப்பகம்
விலை - 600 ரூபாய்
No comments:
Post a Comment